மதுவுக்கு அடிமையானதை ஒப்புக்கொண்ட ஸ்ருதிஹாசன்

நடிகர் கமலஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஸ்ருதி ஹாசன் அளித்த பேட்டியில் ஒரு காலத்தில் நான் விஸ்கிக்கு அடிமையாக இருந்ததாகவும், இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தான் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்ததையும் ஒப்புக் கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே