3 முறை தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்- முகம்மது ஷமி

பல்வேறு காரணங்களால் தான் மூன்று முறை தற்கொலை செய்துகொள்ள யோசித்ததாக கூறி இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் ஷமி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர்.

இந்நிலையில், பொழுது போக்கும் விதமாக கிரிக்கெட் வீரர்கள் தங்கள் சக வீரர்களுடன் இன்ஸ்டாகிராமில் லைவ் அரட்டை மூலம் உரையாடுகின்றனர்.

அந்த வகையில் ரோஹித் சர்மா முகமது ஷமியுடன் உரையாடினார். 

இந்த உரையாடலில் அனைவரும் அதிர்ச்சி அடையும் வகையில் ஒரு தகவலை கூறியுள்ளார் ஷமி.

தான் மூன்று முறை தற்கொலை செய்துகொள்ள எண்ணியதாக கூறி கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

2015 உலகக் கோப்பையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கு ஒன்றரை வருடங்கள் ஆகியதாகவும், மீண்டுவந்த பிறகும் தான் பல இன்னல்களை சந்தித்ததால் அந்நேரத்தில் தற்கொலை செய்துகொள்ள எண்ணியத்தவும் கூறியுள்ளார்.

மேலும், மார்ச் 2018-ல் ஷமியின் மனைவி ஷமி மீது மேட்ச் பிக்சிங், பல பெண்களுடன் தொடர்பு, குடும்ப வன்முறை என ஷமி மீது பல்வேறு புகார்களை கூற அவை அனைத்தும் ஷமியின் வாழ்க்கையை திருப்பி போட்டது.

இதனால் விசாரணை முடியும் வரை பிசிசிஐ, ஷமியின் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஷமி அநேரத்தில் தற்கொலை செய்துகொள்ள எண்ணியதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே