குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம்!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. 

சென்னை கிண்டியில் இருந்து பேரணியாக சென்ற எஸ்டிபிஐ கட்சியினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, முழக்கங்களை எழுப்பினர்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர். 

தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  

குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, நாகையில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, எழுத்தாளர் மதிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தையொட்டி திட்டசேரி, நடுக்கடை பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே