பாறைகளை குடையும் போது ரிக் இயந்திரத்தின் உதிரி பாகங்கள் உடைவதால் பணியில் சிறிய சுணக்கம்

குழந்தை சுர்ஜித்தை மீட்க ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

85 அடி முதல் 87 அடிக்குள் குழந்தை சிக்கியிருக்கலாம் என்று தகவல் கிடைத்திருக்கிறது. ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் குழந்தை சுர்ஜித் மயக்க நிலையில் இருக்கலாம் என ஆட்சியர் சிவராசு தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். நேற்று குழந்தை சுர்ஜித்தின் உடலில் வெப்பம் காணப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போது 38 அடியை எட்டி இருக்கிறது என்ற கூடுதல் தகவல் கிடைத்திருக்கிறது.

மேலும் அதிர்வுகளை தடுக்க ஹைட்ரொலிக் முறை கடைபிடிக்கப்படுகிறது.

ஆழ்துளை கிணற்றுக்கு அருகே தற்போது ஒரு சுரங்கம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த பணி காலை ஏழு மணிக்கு தொடங்கி தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.

பாறைகளை உடைத்து அந்த கற்களை அள்ளும் பணி தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.

அது பெரும் சிரமம் ஏற்பட்டு இருக்கிறது ஏனென்றால் அதை உடைக்கும் பொழுது அந்த இயந்திரத்தின் பாகங்கள் உடைந்து போகிறது. பாறையின் தன்மை அவ்வளவு உறுதியாக இருக்கிறது.

இந்த நிலையில் அவற்றை சரி செய்வதற்காக அவ்வப்போது இடையில் பணிகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. இருப்பினும் பணியானது, தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது.

ஒருபுறம் அந்த பணி நடைபெற்றாலும் மறுபுறம் குழந்தையுடைய உடல் நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள்.

அதேபோல அவருக்கு தொடர்ந்து ஆக்சிஜென் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த பணியை இன்னும் துரிது படுத்த அமைச்சர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் தனியார் கட்டிட நிறுவனங்கள் மூலம் ஆலோசனை நடத்தினார்கள்.

தொடர்ந்து அடுத்த கட்டமாக தற்போது ராமநாதபுரத்தில் இருந்து மேலும் ஒரு அதி நவீன இயந்திரம் கொண்டு வரப்படுகிறது. தற்போது இருக்கக்கூடிய இந்த நவீன இயந்திரத்தை விட அது அதிக வலிமை கொண்டது.

சீக்கிரமாக குறைந்த நேரத்தில் இந்த சுரங்கம் அமைக்க முடியும் என்கிறார்கள்.

ஆழ்துளை கிணறு பக்கத்திலேயே சுரங்கம் அமைக்கும் பணிக்காக மட்டும்தான் இன்னும் காத்திருக்கிறார்கள்.

மற்றபடி அந்த சுரங்கத்தின் உள்ளிறங்கி ஆழ்துளை கிணறு பக்கவாட்டை பெயர்த்து, அதில் துளையிட்டு அதன் உள்ளே சென்று சுஜித்தை மீட்கக்கூடிய நடவடிக்கைக்கே தீயணைப்பு வீரர்கள் தயாராக இருக்கின்றனர்.

ஆனால் சுரங்கப் பாதை அமைப்பது மட்டும்தான் மிக சவாலாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே