அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பிகில் திரைப்பட ட்ரெய்லர் இன்னைக்கு 6 மணிக்கு ரிலீசாக இருக்கு.
இது குறித்து ரசிகர்களோட ஆர்வத்தை தூண்டும் விதமாக படத்தோட கிரியேட்டிவ் ப்ரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு வாக்கெடுப்பு நடத்துனாங்க.
அதுல நாளை வெளியாகும் பிகில் டிரெய்லர் எத்தனை நிமிடங்கள் ஓடக்கூடிய தாக இருக்கும்-னு சொல்லுங்க அப்படிங்கற மாதிரி ஒரு கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு கிட்டத்தட்ட லட்சக்கணக்கான ரசிகர்கள் பதில் சொல்லி இருந்தாங்க.
அந்த வாக்குயடுப்பு அடிப்படையாகக் கொண்டு, அர்ச்சனா கல்பாத்தி இன்னைக்கி அதற்கான பதிலை ட்வீட் செஞ்சிருக்காங்க.
அதுல நேற்றைய வாக்கெடுப்பின் படி கிட்டத்தட்ட 24 சதவீதம் பேர் சரியா சொன்னதாகவும், படத்தோட ட்ரெய்லர் 2.30 நிமிடங்களுக்கு அதிகமா இருக்கும்-னு சொல்லி இருக்காங்க.
ஏற்கனவே பிகில் ட்ரைலரை பார்க்க ஆர்வமா இருக்கக்கூடிய ரசிகர்களுக்கு, இந்த செய்தி இப்ப குஷிப்படுத்தும் விதமாக அமைஞ்சிருக்கு.