மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்பு மற்றும் அம்மாநிலங்களில் ஜிஎஸ்டி தாக்கல் செய்வது தாமதமாகி உள்ளதாலும், வரிவசூல் குறைந்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரியில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்ய வரித்துறை சார்ந்த நிபுணர்கள் உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
தொழில் துறை சார்ந்தவர்கள் கணக்கு தணிக்கையாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
வரி விதிப்பில் பிரச்சனை இருப்பதாக நிபுணர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக வரி விதிப்பை தவறு சொல்வதை தவிர்த்து விட்டு அதனை சரிசெய்ய என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்குமாறும் அவர் கூறியுள்ளார்.