இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 3 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.

புனேவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் இரண்டாம் நாளான நேற்று 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் என்ற நிலையில் இந்திய அணி ஆட்டத்தை தொடர்ந்தது.

கேப்டன் விராட் கோலி நிலைத்து நின்று இரட்டை சதம் அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 இரட்டை சதங்களை அடித்துள்ள சச்சின், ஷேவாக் ஆகியோரின் சாதனைகளை முறியடித்த கோலி 7வது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

ஜடேஜா 91 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், முதல் இன்னிங்சில் 601 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய அணி டிக்ளேர் செய்தது.

கோலி 254 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி வீரர்கள் எல்கர் 6 ரன்னிலும், மார்கிராம் ரன் எதுவும் எடுக்காமலும், பவுமா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

3 விக்கெட் இழப்புக்கு அந்த அணி 36 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள நிலையில் மூன்றாம் நாளாக இன்றைய ஆட்டம் நடைபெறுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே