Amphan புயல் : சேதப் பகுதிகளை இன்று பார்வையிடுகிறார் பிரதமர் மோடி

மேற்கு வங்கத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே நம்பிக்கை அளித்திருந்த நிலையில், தற்போது ஆம்பன் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட நேரிலேயே மேற்கு வங்கத்திற்கு சென்றிருக்கிறார்.

விமானத்தில் இருந்தபடியே பாதிப்பு பகுதிகளை தற்போது பார்வையிடவும் போகிறார்!!!

வங்கக் கடலில் ஆம்பன் புயல் உருவாக போகிறது என்று அறிவித்தபோதுகூட இந்த அளவுக்கு பாதிப்பை தரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.. குறிப்பாக 72 பேரை காவு வாங்கி சென்றள்ளது இந்த ஆம்பன்..

அந்த சூறாவளிக்கு ஓங்கி உயர்ந்த மரங்கள் முறிந்தும், கரண்ட் கம்பிகள் அறுந்து தொங்கியும் மிரட்டியது… முக்கியமாக வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனாஸ், ஹவுரா, கொல்கத்தா.

மேற்கு மித்னாபூர், கிழக்கு மித்னாபூர், புருலி பங்குரா உள்ளிட்ட பகுதிகளில் புயல் சேதத்தின் பாதிப்பு ஏராளம்.. ஏராளம்!!

ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.. அவர்களின் பயிர்கள் எல்லாம் நீரில் மூழ்கி உள்ளன… பெரிய பெரிய பாலங்களே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை கண்டு மக்கள் நடுங்கினர்..

இங்கே பேயாட்டம் புயல் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களிலும் இதேபோல பாதிப்பை தந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் அடித்து சுழட்டிய புயலின் தாண்டவம் வீடியோக்கள் மூலமாகவும் வெளிவந்து அனைவருக்கும் கலக்கத்தை தந்தது.

எப்படி பார்த்தாலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்பட்டது.. எந்த அளவுக்கு பாதிப்பு என்று மொத்தமாக கணிக்க எப்படியும் 3, 4 நாட்கள் ஆகும் என்றார்கள்…

மம்தா பானர்ஜி மாநில நிலைமையை கண்டு மனம் வருந்தினார்.. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தார்..

இந்த புயல் பாதிப்பை நேரில் வந்து பார்வையிடுமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுப்பேன் என்றும் சொன்னார்.

அப்போதுதான், பிரதமர் நாளை தினம் அதாவது இன்று, புயல் பாதிப்பு பகுதிகளை விமானம் மூலம் ஆய்வு செய்வார் என அறிவிக்கப்பட்டது..

முன்னதாக “மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயல் பாதித்த வீடியோ காட்சிகளை பார்த்தேன்… இந்த துயரமான நேரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும் மேற்கு வங்கத்திற்கு ஆதரவாக நிற்கிறது. புயலால் பாதித்தவர்கள் மீண்டு வருவதற்கு பிரார்த்திக்கிறேன்…

இயல்பு நிலைக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பிரதமர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்திருந்தார்.

விமானத்தில் பறந்தபடியே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் இன்று பார்வையிட இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்களும் உறுதி செய்திருந்தன..

இந்நிலையில், பிரதமர் இன்று விமானத்தில் மேற்கு வங்கம் கிளம்பி உள்ளார்.. “மேற்கு வங்கத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஏற்கனவே பிரதமர் உறுதி அளித்த நிலையில்,

நிச்சயம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என நம்பப்படுகிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே