அமித் ஷாவுடன் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று மதியம் முதல்முறையாக சந்தித்து பேசினார்.

டெல்லி முதலமைச்சராக 3ஆவது முறையாக பதவியேற்ற கெஜ்ரிவால், மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல விரும்புவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் டெல்லியிலுள்ள அமித் ஷாவின் கிருஷ்ண மேனன் இல்லத்துக்கு சென்று இன்று மதியம் சுமார் 3.15 மணியளவில் அவரை சந்தித்துப் பேசினார். 

இதையடுத்து ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், அமித் ஷாவுடனான சந்திப்பு நல்லமுறையில் நடைபெற்றதாகவும், டெல்லியில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து அவருடன் ஆலோசனை நடத்தியதாகவும் கூறியுள்ளார்.

டெல்லியின் வளர்ச்சிக்காக இருவரும் இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே