ரயில் நிலைய கவுன்ட்டர்களில் இன்று முதல் டிக்கெட் முன்பதிவு

சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட மையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

இந்தியாவில் கொரோனா பொதுமுடக்கத்திற்கு இடையே அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் கூடுதலாக ஜூன் 1-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதற்கான டிக்கெட்டுகளை ரயில் நிலையத்தின் மையங்களில் முன்பதிவு செய்யலாம் என நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்களின்படி, டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது.

தற்போது இயக்கப்படும் மற்றும் ஜுன் 1 முதல் இயக்கப்படவிருக்கும் ரயில்களுக்கான முன்பதிவு குறிப்பிட்ட மையங்களில் மட்டுமே நடைபெறுகிறது.

திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு, மங்களூர் மற்றும் சென்னை சென்ட்ரல் ஆகிய முன்பதிவு மையங்களில் மட்டும் 2 கவுன்ட்டர்கள் கொண்டு செயல்படுகிறது.

இந்த மையங்களில் முன்பு பதிவு மட்டுமே செய்யமுடியும்.

மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான பணத்தை தற்சமயம் திரும்பப்பெற இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்ய ரயில் நிலையங்களுக்கு வருபவர்கள் முகக்கவசம் மற்றும் சமூக விலகலை கட்டாயம் பின்பற்றவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே