உணவு மற்றும் வேளாண் அமைப்பான எப்ஏஓ-வின் 75-வது ஆண்டைக் குறிக்கும் வகையிலும், இந்தியாவுக்கும், இந்த அமைப்புக்கும் உள்ள நீண்டகால தொடர்பைக்குறிக்கும் வகையில் வரும் 75 ரூபாய் மதிப்பாலான சிறப்பு நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

அண்மையில் உருவாக்கப்பட்ட உயிரி செறிவூட்டிய 8 பயிர்களின் 17 ரகங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

வேளாண்மை மற்றும் ஊட்டச்சத்து விஷயத்தில் அரசின் முன்னுரிமையைக்காட்டும் விதத்தில் அமையும். வறுமையை முற்றிலுமாக ஒழிப்பது, ஊட்டச்சத்து குறைபாட்டை அகற்றுவது ஆகிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் சாசனமாக இது திகழும்.

நாடு முழுவதையும் சேர்ந்த அங்கன்வாடிகள், வேளாண் அறிவியல் மையங்கள், இயற்கை விவசாயம் மற்றும் தோட்டக்கலை இயக்கங்களை சார்ந்தவர்கள் இதன் பார்வையாளர்களாக இருப்பார்கள். 

மத்திய வேளாண் அமைச்சர், நிதி அமைச்சர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

2016-ம் ஆண்டை சர்வதேச பருப்பு வகை ஆண்டு எனவும், 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாகவும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற இந்தியாவின் யோசனையை எப்.ஏ.ஓ. ஏற்றுக்கொண்டது.

10 கோடிக்கும் மேற்பட்டவர்களிடத்தில் உள்ள மயக்கம், தடுமாற்றம், ஊட்டச்சத்து பற்றாக்குறை, ரத்தசோகை, பிறக்கும் சிசுவின் எடை குறைவு ஆகிய குறைபாடுகளைக் களைவதை நோக்கமாகக் கொண்டு, லட்சிய திட்டமான போஷான் அபியான் இயக்கத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது. உள்ளூரிலேயே, ஆரோக்கியமான, பலவகைப்பட்ட, போதிய சிறு, குறு ஊட்டமளிக்கும் உணவுகள் கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே