நாளை ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்கும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நாளை ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்கும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது குறித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.

மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தினால் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.

மேலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும் , காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் , பிரதமர் மோடியின் அழைப்பு விடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு சேவைகள் நாளை நிறுத்தப்படுகிறது.

மேலும் நாளை தமிழகத்தில் ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்கும் என பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே