தமிழகத்தில் கொரோனா நோய் தாக்குதலால் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதுவரை இந்நோயால் 480க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் நேற்று வரை மட்டும் மூன்று பேர் பலியான நிலையில் இன்று பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த 71 வயது முதியவர் ஒருவர் கடுமையான காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் கடந்த செவ்வாய் கிழமை திடீரென ஏற்ப்பட்ட மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார்.

ஆனால் அப்போது அவரின் இரத்த மாதிரிகளின் முடிவுகள் வராமல் இருந்துள்ளது. ஆனால் தற்போது அவரின் இரத்தமாதிரிகளின் முடிவுகள் இன்று காலை வந்துள்ளது.

அதை வைத்து அவர் கொரோனா தொற்றால் இருந்தார் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.

அதனை தொடர்ந்து நேற்று இரவு 61 வயது முதியவர் ஒருவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து தமிழகத்தில் தற்போது பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே