முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதில் 4,700 ஊராட்சி தலைவர் பதவி இடங்கள், 37,830 ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்கள், 2,546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இடங்கள், 260 மாவட்ட வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

27-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். 

ஓட்டுப்பதிவை வீடியோவில் பதிவு செய்யவும், வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலை சுமூகமாக நடத்தி முடிக்கும் வகையில் பணிகளை ஒருங்கிணைக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் முதல் முறையாக பறக்கும் படைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து உதவவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பதட்டமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் 48,579 போலீசாரும், காவல்துறை நண்பன் திட்டத்தில் பணியாற்றும் 14,500 பேரும் என மொத்தம் 63 ஆயிரத்து 79 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என டி.ஜி.பி. அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27-ந்தேதி மாலை ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டு பெட்டிகள் ஓட்டு எண்ணும் இடங்களுக்கு கொண்டு செல்லப்படும். 2-ந்தேதி ஓட்டுகள் எண்ணி முடிவுகள் வெளியிடப்படும்.

ராசிபுரம் அடுத்த போதமலை மலைபகுதிக்கு பல ஆண்டுகளாகவே சாலை வசதி இல்லாததால் மலைவாழ் கிராமங்களுக்கு வாக்குபதிவு பெட்டியை தலைச்சுமையாக எடுத்துச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் வாக்கு பதிவு பெட்டியை, தேர்தல் அலுவலர், ஊழியர்கள், காவல்துறைனர் உள்ளிட்ட 15 க்கு மேற்பட்டோர் கரடுமுரடான பாதையில் தலைச்சுமையாக எடுத்துச்சென்றனர்.  

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே