வன்முறையை நோக்கி வழிநடத்துபவர்கள் சரியான தலைவர்கள் அல்ல – ராணுவ தளபதி பிபின் ராவத்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் மக்களை வன்முறைக்கு அழைத்துச் செல்வது தலைமைப் பண்பின் அடையாளம் அல்ல என்று ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்திருக்கிறார்.

சுகாதாரம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர் கூட்டத்திலிருந்து தான் தலைவர்கள் உருவாகிறார்கள் என்று கூறினார்.

எனினும் மக்களை பொருத்தமற்ற திசையில் வழி நடத்துபவர்கள் தலைவர்களாக இருக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

மாணவர்கள் நடத்தும் போராட்டங்களை சுட்டிக்காட்டிப் பேசிய ராணுவத்தளபதி பிபின் ராவத் வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவங்களை நோக்கி மக்களை அழைத்துச் செல்வது நல்ல தலைமைப் பண்பாக அமையாது என்று கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே