முப்படை தளபதி என்பது யார்…? அவரது பொறுப்புகள் என்ன?

இந்தியாவில் முப்படைகளுக்கும் ஒரே தலைமை தளபதி நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முப்படை தளபதி என்பவர் யார் ?? அவரது பணிகள் என்ன?? என்பதை பார்க்கலாம்.

தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய மூன்று படைகளின் ஆன ஒருங்கிணைப்புடன் உருவாக்கப்பட்டதுதான் CDS அல்லது Chief of the Defence Staff எனப்படும் முப்படை தளபதி பதவி.

முப்படை தலைமை தளபதி நான்கு நட்சத்திரங்கள் பெற்றவராகவும்; அவர்கள் பெறும் ஊதியம் பெறுபவராகவும் இருப்பர்.

இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளின் சிறப்புகளை அறிந்தவராகவும் இந்த படைகளின் செயல்பாடு, பிரத்தியேக நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு அமைச்சருக்கு இராணுவ ஆலோசகராக பாதுகாப்பு தலைமை தளபதி செயல்படுவார்.

எந்த ஒரு ராணுவ கட்டளையை பாதுகாப்பு தளபதி செயல் படுத்த மாட்டார்.

படைகளை நவீனப்படுத்துவது, ஒருங்கிணைப்பது மற்றும் மூன்று படைகள் தொடர்பாக அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவது இந்த பதவியின் முக்கிய பணியாக இருக்கும்.

முப்படை சேவைகளின் நீண்டகால திட்டமிடல், ஆயுதங்கள் கொள்முதல், பயிற்சி மற்றும் தளவாட ஒருங்கிணைப்பு களை இவர் மேற்கொள்வார்.

கூட்டு திட்டமிடல் மற்றும் கூட்டு ராணுவ பயிற்சிகளை நடத்தி அதன் மூலம் ராணுவ பலத்தை அதிகரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்.

இந்தியா அணு ஆயுத நாடாக இருப்பதால் முப்படை தளபதி அணுசக்தி தொடர்பாக பிரதமரின் ஆலோசகராக செயல்படுவார். முப்படைகளும் அடங்கிய தியேட்டர் கமாண்ட் எனப்படும் ஒருங்கிணைந்த பிரிவை உருவாக்குவார்.

இதன் மூலம் மூன்று படைகளுக்குமான உத்தரவுகளும், தகவல்களும் உடனடியாக சென்று சேரும்.

உயர் இராணுவ சீர்திருத்தங்களை பரிந்துரைக்க 1999 ஆண்டு கார்கில் போருக்கு பின்னர் நியமிக்கப்பட்ட கே.சுப்பிரமணியம் குழு முப்படை தளபதி பதவியை பரிந்துரைத்தது.

2012ம் ஆண்டு நரேச் சந்திரா கமிட்டியும் இந்த பரிந்துரையை முன் வைத்தது.

இந்த நிலையில் முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைமை தளபதி பதவியை உருவாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் தெரிவித்திருந்ததையடுத்து அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே