தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 13ஆம் தேதி நடைபெறும்..!!

கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்கும் சட்டத்திற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் துவங்கப்படும் பல்கலைக்கழகத்திற்கான சட்ட மசோதா உட்பட 8 முக்கிய மசோதாக்கள் வாய்மொழி வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் சட்டப்பேரவை கூட்டமானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் வரும் 13-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இடைக்கால பட்ஜெட் குறித்து நடக்கவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே