பாஜகவை மறைமுகமாக சாடிய பிரணாப் முகர்ஜி!

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் பெரும்பான்மைவாத சிந்தனையுடன் செயல்படக் கூடாது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்று பேசிய பிரணாப் முகர்ஜி, பெரும்பான்மையான வாக்காளர்கள் ஒரு கட்சியை ஆதரித்த வரலாறு நமது நாட்டுக்கு கிடையாது என்றும்; இதனை அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் பாஜகவை மறைமுகமாக சாடினார்.

நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதால் மட்டுமே நாடாளுமன்ற நடைமுறையை மேம்படுத்த முடியாது என்றும்; மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543 என்பதிலிருந்து ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே