வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோர், 11 ஆவணங்களை காட்டி உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
- பாஸ்போர்ட்,
- ஓட்டுநர் உரிமம்,
- ஆதார் அட்டை,
- வங்கி கணக்கு புத்தகங்கள்,
- அஞ்சலக கணக்கு புத்தகங்கள்,
- பான் கார்டு,
- தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை,
- 100 நாள் பணி அட்டை,
- தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை,
- ஓய்வூதிய ஆவணம்,
- வாக்காளர் புகைப்பட சீட்டு உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான சட்டபூர்வ ஆணையையும் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது.