குடியுரிமை சட்டம் தொடர்பாக குழப்பம் ஏற்படுத்தும் காங்கிரஸ் – அமித் ஷா குற்றச்சாட்டு

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அமித்ஷா, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறினார். 

மக்களை தவறாக வழிநடத்தி, டெல்லியில் அமைதி சூழ்நிலையை கெடுத்து விட்டதாக குற்றம்சாட்டிய அமித்ஷா, மத்திய அரசு கொண்டுவந்துள்ள நலத்திட்டங்களை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செயல்படுத்துவது இல்லை என்றும் கூறினார். 

மத்திய அரசு திட்டங்களின் பெயரை மாற்றி, தான் கொண்டுவந்த திட்டங்கள் என கூறவே கெஜ்ரிவால் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

வன்முறையை தூண்டும் காங்கிரசுக்கு, டெல்லி தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

விரைவில் தாமரை மலரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே