பீஹார் முதல்வரை காணவில்லை என ஒட்டப்பட்ட போஸ்டர்கள்…!

பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரை காணவில்லை என்று பாட்னாவின் பல பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து கருத்து தெரிவிக்கவில்லை என கூறி பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாரை காணவில்லை என பாட்னாவில் பல பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அவற்றில் காது கேட்காத, வாய் பேச முடியாத கண்பார்வையற்ற பீகார் முதலமைச்சர் காணவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர்களுக்கு நிதீஷ் குமாரின் ஜனதா தளம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஜனதா தளம் கட்சி ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே