கொரோனா வைரஸ் காரணமாக ஆந்திராவில் தேர்தல் ஒத்திவைப்பு!

ஆந்திராவில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தல் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 6 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் வரும் 21ம் தேதி மண்டல பரிஷத் மற்றும் ஜில்லா பரிஷத்துக்கும், 23ந்தேதி நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெறவிருந்தது.

இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்ற நிலையில் வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது.

மேலும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக பஞ்சாயத்து தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. 

பஞ்சாயத்து தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை நடைபெற இருந்த நிலையில் ஒட்டுமொத்தமாக உள்ளாட்சித் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மாநில தேர்தல் அதிகாரி ரமேஷ் குமார் இது குறித்து அறிவிப்பை வெளியிட்டார்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரக் கூடிய நிலையில் ஒட்டு மொத்த தேர்தலை 6 வாரத்திற்கு நிறுத்தி வைப்பதாக அவர் அறிவித்தார்.   

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே