சென்னை வந்த எஞ்ஜீனியருக்கு கொரோனா அறிகுறி?

பிரேசிலில் இருந்து சென்னை திரும்பிய மென்பொறியாளர் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலையத்தில் சிறப்பு மருத்துவ குழுவினர் சோதனை செய்து வருகின்றனர்.

இதில் துபாயில் இருந்து விமானத்தில் வந்த மென்பொறியாளர் ஒருவருக்கு காய்ச்சல் மற்றும் சளி இருப்பது தெரியவந்தது. 

பிரேசிலில் பணியாற்றி வரும் அவர் அங்கிருந்து துபாய் வழியாக சென்னை வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற காரணத்தால் அவரை மருத்துவ குழுவினர் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே