மாஸ்டர் இசை வெளியீட்டு விழா இன்று!

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளது. இதில் குட்டிகதை மூலம் விஜய் அரசியல் பேசுவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடிகர் விஜய், பிகில் பட விழாவில் யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ, அங்குதான் அவர்களை உட்கார வைக்க வேண்டும் என பேசியது அப்போது வைரலாக மாறியது.

இந்த பேச்சு யாரை குறிக்கிறது என விவாதங்களும் எழுந்தது. ஆளுங்கட்சியை தான் கூறுகிறார் என்றும், விஜய் அரசியலுக்கு வருகிறார் என்றும் ஆருடங்கள் கணிக்கப்பட்டன.

இந்த நிலையில்தான் தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை, சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.

விஜய்யின் முந்தைய படங்களைப் போல இல்லாமல், ரசிகர்களைக் கூட அனுமதிக்காமல், படக்குழுவினர் மட்டுமே கலந்து கொள்ளும் விழாவாகத் இது திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விழாவில், விஜய் என்ன பேசப் போகிறார் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

காரணம், கடந்த சில படங்களின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிய அரசியல் தான்.

இசை வெளியீட்டு விழாக்களில் அரசியல் பேசும் விஜய் இந்த விழாவிலும் அரசியல் பேசுவாரா? என ஆவலுடன் காத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே