கரூரில் ஸ்ரீ அமராவதி கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

வெள்ளியணை ஸ்ரீ அமராவதி கல்லூரியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கரூரை அடுத்த வெள்ளியணை ஸ்ரீ அமராவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழாவிற்கு, தேசிய திருவள்ளுவர் மாணவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், கரூர் பரணிபார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை முதல்வருமான ராம சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

கல்லூரியின் முதலாமாண்டு பொங்கல் விழா கொண்டாடத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பாக நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் சிறப்புரையாற்றிய அவர் கல்லூரியில் நடைபெறும் முதலாமாண்டு பொங்கல் விழாவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில், தமிழ் மொழியின் தொன்மை பற்றியும், தான் மேற்கொண்டுவரும் தமிழி பயிற்சி பற்றியும் சிறப்புரையாற்றினார்.

தமிழி பயிற்சியின் அவசியம் பற்றி பேசிய அவர் மாணவ, மாணவிகளுக்கு தமிழி முதல் வகுப்பை துவக்கி வைத்து, இப்பயிற்சியில் பயின்று சிறப்பாக தேர்ச்சி பெறும் மாணவர்களில் ஒருவரை தேசிய அளவில் தமிழி பயிற்சியை எடுத்து செல்லக்கூடிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுப்பதாகவும் உறுதியளித்தார்.

நிகழ்ச்சியின் முடிவில் கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் தயார் செய்திருந்த பொங்கல் விழா ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

கல்லூரியின் சார்பில் விவசாயிகளின் வாழ்க்கையை முன்னிறுத்தும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

நமது செய்தியாளர் : மு.மணிகண்டன்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே