தேனியில் புதுவருடத்தினை மரம் நட்டு வரவேற்ற மழைத்துளி பவுண்டேசன் குழுவினர்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஐயா அவர்களின் கனவு திட்டமான 2020 நிறைவேற்றும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டன. 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மரிக்குண்டு சுப்புலாபுரத்தில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் அணுசக்தி விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் கனவு லட்சியமாக இருந்த 2020 என்ற திட்டத்தின் கீழ் அவரின் கனவை நிறைவேற்றும் விதமாக மாசில்லா தேசம் என்ற அடிப்படையில் புத்தாண்டினை முன்னிட்டு மழைத்துளி பவுண்டேசன் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த மரம் நடும் விழாவில் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு  மரக்கன்றுகளை நட்டனர்.

மேலும் மழைத்துளி பவுண்டேசன் சார்பில் தேனி வடபுதுப்பட்டி, திருச்செந்தூர் மாவட்டம் பகுதிகளில் மாணவ மாணவிகளும், அருணாச்சலப்  பிரதேசத்தில் ராணுவ வீரர்கள் கலந்துகொண்டும் மழைத்துளிபவுண்டேசன் சார்பில் மரக்கன்றுகளை நட்டனர்.

மேலும் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் மழைத்துளி பவுண்டேசன் சார்பில் மாசில்லா தேசத்தினை உருவாக்கும் விதமாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

கூடிய விரைவில் அனைத்து பகுதிகளிலும் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெறும் என்று மழைத்துளி பவுண்டேசன் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சற்குரு கூறினார்.

நமது செய்தியாளர் : C . பரமசிவம்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே