ஜல்லிக்கட்டு : சீறிப்பாயும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் ஆர்வம்

புகழ்பெற்ற மதுரை மாவட்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.

பொங்கல் திருநாள் முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில் ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் விருவிருப்பாக நடைபெற்றது.

இதையடுத்து, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியதும், வாடிவாசலில் இருந்து சீறிபாயும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

களத்தில் 700 காளைகள், 730 மாடு பிடி வீரர்கள் இருக்கின்றனர். காளைகளை அடக்க சுழற்சி முறையில் வீரர்கள் களம் இறக்கப்படுகின்றனர். ஒரு சுற்றுக்கு 75 மட்டுமே வீரர்கள் மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது.

வாடிவாசலில் இருந்து 15 மீட்டருக்குள் காளைகளை அடக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கு காயம் ஏற்படாதவாறு தேங்காய் நார்களை கொண்டு திடல் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சுற்றில் பங்கேற்கும் வீரர்களுக்க வண்ணச் சீறுடைகள் வழங்கப்பட்டுள்ளது. 10 நிமிட இடைவெளி விட்டு ஒவ்வொரு சுற்றும் நடத்தப்படுகிறது. மேலும் வெற்றி பெற்ற காளையர்களுக்கு சைக்கிள், பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியை ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் அதிகரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதோடு ஜல்லிக்கட்டு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படுகிறது. மதுரை மாநகர காவல் ஆணையர் கண்காணிப்பில் 1053 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே