திரையரங்குகளில் திருக்குறளை திரையிடுவது குறித்து ஆலோசனை

திரையரங்குகளில் திருக்குறள் திரையிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜு 1043 பயனாளிகளுக்கு 3 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர் கோவில்பட்டியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசியவர் திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடுவதற்கு முன்பாக திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் வெளியிடுவதற்கு தயாரிப்பாளர் சங்க பிரதிநிதிகளிடம் அறிவுறுத்தப்படும் என கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே