இந்தியப் பிரதமர் பிரதமர் மோதி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
இது கொரோனா வைரஸ் ஊரடங்கு அமல்படுத்திய பின்பு நரேந்திர மோதி இந்திய மக்களுக்கு ஆற்றும் மூன்றாவது உரையாகும்.
ஒரு வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையே பாதித்துள்ளது என்றும் இந்த உலகமே நான்கு மாதகாலமாக கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடி வருவதாகவும் நரேந்திர மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் தொடங்கிய சமயத்தில் மருத்துவ ஊழியர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள் ஒன்று கூட இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை.
அப்போது சில N-95 முகக் கவசங்கள் மட்டுமே இருந்தன.
இப்பொழுது நாள்தோறும் இரண்டு லட்சம் மருத்துவப் பாதுகாப்பு உடைகள் மற்றும் இரண்டு லட்சம் N-95 முகக் கவசங்கள் ஆகியவை இந்தியாவில் தயாரிக்கப் படுகின்றன என்று தனது உரையில் நரேந்திர மோதி குறிப்பிட்டார்.
உலக நாடுகளை மண்டியிட வைத்து விட்டது கொரோனா வைரஸ்.
கொரோனா வைரஸ்க்கு எதிரான போரை தொடர வேண்டியுள்ளது. நம்மை நாமே தற்காத்துக் கொண்டு கொரோனாவிற்கு எதிராக போராட வேண்டியுள்ளது.
எதையாவது செய்து முன்னேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இந்தியா சுயசார்புள்ள நாடு என்பதை நிரூபிக்க வேண்டும் என்று தனது உரையில் நரேந்திர மோதி குறிப்பிட்டார்.
இந்தியா தனது கொள்கைகளின் மூலம் உலகத்தை மாற்றியுள்ளது.
யோகா என்பது உலகுக்கான இந்தியாவின் பரிசு. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகள் உலக நாடுகளால் பாராட்டப்படுகின்றன.
அதன்மூலம், இந்தியாவின் திறமைகள் குறித்து நம்பிக்கை ஏற்படத் தொடங்கியுள்ளது. உலகம் உயிருடனும் மரணத்துடனும் போரிட்டுவருகிறது.
இந்தியாவின் மருந்துகள் புதிய நம்பிக்கையைக் கொண்டுவருகிறது. இந்த நடவடிக்கைகளால் உலகம் முழுவதும் இந்தியா பாரட்டப்படுகிறது. எல்லா இந்தியர்களும் பெருமைப்படுகின்றனர்.
பொருளாதாரத்தை மீட்டெடுக்க பொருளாதாரத் திட்டத்துக்காக ஆத்மா நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஒதுக்கப்படும்.
அதன் மொத்த ஒதுக்கீடு 20 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும் என்று தெரிவித்தார்.