தமிழகத்தில் ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1477ஆக அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதார துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் :
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது 1,477 ஆக தமிழகத்தில் உயர்ந்துள்ளது.
சென்னையில் 50 பேருக்கு இன்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 46 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
தமிழகத்தில் 3 நாட்களாக உயிரிழப்பு எதுவும் இல்லை என சுகாதாரதுறை தெரிவித்துள்ளது