மே 17ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரும் நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் தனது உரையை தொடங்கியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்த பொதுமுடக்கத்தை பிரதமர் மோடி மார்ச் மாதத்தில் பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
அப்போது இரவு 8 மணிக்கு அவர் மக்களுடன் உரையாற்றும்போது இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இதனால் அதன்பின்னர் ஊரடங்கு தொடர்பான தகவல்களை இரவு 8 மணிக்கு மக்களுடன் உரையாற்றும்போதே மோடி அறிவித்து வந்தார்.
இருப்பினும் மே 4ஆம் தேதிக்குப் முன்னர் அறிவிக்கப்பட்ட ஊரடங்கை மோடி உரையாற்றி தெரிவிக்கவில்லை.
அப்போது மத்திய உள்துறை அமைச்சகமே தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பொதுமுடக்கம் மற்றும் பொருளாதாரம் குறித்து நேற்று மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இதைத்தொடர்ந்து இன்று இரவு 8 மணிக்கு மக்களும் மோடி உரையாற்றுவார் என பிரதமர் அலுவலகம் அறிவித்திருந்தது.
மே 17ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரும் நிலையில், பிரதமர் மோடி உரையாற்றுவதாக வெளியான தகவல் முக்கியத்துவம் பெற்றது.
இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார்.