“கொஞ்சம் உங்களுக்காகவும் சுயநலத்துடன் விளையாடுங்கள்” – கோலிக்கு மைக்கேல் வாகன் அட்வைஸ்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கொஞ்சம் சுயநலத்துடன் விளையாட வேண்டும் என்றும் அது இந்திய அணிக்கு நலன் சேர்க்கும் என்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு முறையும், தற்போது நடைபெற்று வரும் டி20 தொடரில் ஒரு முறையும் விராட் கோலி டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பியுள்ளார். இந்நிலையில், விராட் கோலியின் ஃபார்ம் குறித்து மைக்கேல் வாகன் பேசியுள்ளார். கோலி பார்ம் அவுட் ஆகவில்லை என்பதை தன்னால் ஏற்க முடியாது என்று அவர்  கூறியுள்ளார். 

“கோலி கொஞ்சம் சுயநலத்துடன் விளையாட வேண்டும். அது இந்திய அணிக்கும் நலன் சேர்க்கும். வந்தவுடன் ரன் சேர்ப்பதை காட்டிலும், கிரீஸில் சிறிது நேரம் களத்தில் நின்று கோலி விளையாட வேண்டும். பத்து பந்துகள் வரை ரன் சேர்க்காமல் கோலி களத்தில் நிற்க வேண்டும். அதை செய்து விட்டாலே கோலி ரன் சேர்க்க தொடங்கி விடுவார். அப்படி செய்தாலே அதன் பிறகு கோலி ரன் சேர்ப்பதெல்லாம் தண்ணி பட்ட பாடு. 

கோலி பார்ம் அவுட் ஆகவில்லை என்பதை என்னால் ஏற்க முடியாது” என சொல்லியுள்ளார் வாகன்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே