#NZvsIND : இந்திய அணிக்கு 274 ரன்கள் இலக்கு..!!

2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு நியூசிலாந்த் அணி 274 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்த் வெற்றி பெற்று போட்டித் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்த் இடையேயான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ஆக்லாந்தில் இன்று நடைபெறுகிறது.

போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்யவே, நியூசிலாந்த் முதலில் பேட்டிங் செய்தது.

சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் கப்தில் 79 ரன்களும், மூத்த வீரர் டெய்லர் 73 ரன்களும், நிகோல்ஸ் 41 ரன்களும் குவித்தனர்.

முடிவில் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 273 ரன்களை நியூசிலாந்த் அணி சேர்த்தது.

டெய்லர் 73 ரன்களுடனும், ஜேமிசன் 25 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்திய அணி தரப்பில் சாகல் அதிகப்பட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே