பிங்க் பால் டெஸ்ட் : வரலாற்று சாதனை படைத்த விராட் கோலி!

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி சதமடித்து வரலாறு படைத்துள்ளார்.

இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைாதனத்தில் தொடங்கியது.

இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் வங்கதேச அணி 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இஷாந்த் சர்மா 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா களமிறங்கினர்.

இந்திய அணி 43 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்திருந்த போது கேப்டன் விராட் கோலி களமிறங்கினார்.

இந்த போட்டியில் கோலி 32 ரன்கள் எடுத்த போது டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக 5000 ரன்களை எட்டினார்.

விராட் கோலி கேப்டனாக 53வது டெஸ்ட் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டி உள்ளார்.

அதை தொடர்ந்து மேலும் ஒரு வரலாற்று சாதனையை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானதில் விராட் படைத்துள்ளார்.

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்தன் மூலம் இந்திய டெஸ்ட் கேப்டன்களில் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

விராட் கோலி கேப்டனாக 10 சதங்கள் அடித்துள்ளார்.

சுனில் கவாஸ்கர் 9 சதங்களுடன் 2ம் இடத்திலும்,

மகேந்திர சிங் தோனி 5 சதங்களுடன் 3ம் இடத்திலும் உள்ளனர்.

மேலும் பிங்க் பந்தில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் விராட் கோலி பெற்றுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே