LATEST UPDATE : தலைவி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் வெளியீடு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி, படமாக்கப்பட்டு வரும் தலைவி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகும் படம் தலைவி.

இந்தப் படத்தில் நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடிக்கிறார்.

ஜெயலலிதாவின் வெவ்வேறு கால கட்ட வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் 4 தோற்றங்களில் நடிக்கும் கங்கனா ரணாவத்துக்கு ஹங்கர் கேம்ஸ், கேப்டன் மார்வல், பிளேட் ரன்னர் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய ஒப்பனை கலைஞர் ஜேசன் காலின்ஸ் ஒப்பனை செய்துள்ளார்.

இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய 3 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கியது.

இந்நிலையில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது.

அதில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடித்த வெண்ணிற ஆடை படத்தின் படப்பிடிப்பு மற்றும் அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

பின்னர் தொண்டர்கள் மத்தியில் ஜெயலலிதா பாணியில் தனது கைகளை உயர்த்துகிறார் கங்கனா.

மேலும் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 20-ம் தேதி படம் திரைக்கு வரும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே