Technology : வாட்ஸ்அப்-ஐ டெலிட் செய்யுங்கள்! – டெலிகிராம்

உங்களது ப்ரைவஸி பொதுவெளியில் வெளியாகமல் இருக்க உடனடியாக வாட்ஸ்அப் செயலியை டெலிட் செய்துவிடுங்கள் என டெலிகிராம் நிறுவனர் பவெல் துரோவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி பயனாளர்களின் சுய விவரங்கள், தகவல்களை அவர்களின் அனுமதியின்றே பொதுவெளியில் வெளியிடுகிறது என்ற குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பரவலாக எழுந்துள்ளது.

இந்த சூழலில்தான் மற்றொரு சாட்டிங் ஆப் ஆன டெலிகிராமின் நிறுவனர் வாட்ஸ்அப் செயலியை டெலிட் செய்யுமாறு பயனாளர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

துரோவ் கூறுகையில்,

  • வாட்ஸ்அப் மூலம் உங்களது வாட்ஸ்அப் புகைப்படங்கள் மட்டுமின்றி உங்களது ஸ்மார்ட்போன் கேலரியில் உள்ள புகைப்படங்களையும் திருட முடியும்.
  • நீங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுக் கொண்டேதான் இருப்பீர்கள்.
  • வாட்ஸ்அப் என்னும் ஒற்றுவேலை செய்யும் செயலியை உடனடியாக டெலிட் செய்யுங்கள் என டெலிகிராமின் 3,35,000 பயனாளர்களுக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.

சர்வதேச அளவில் வாட்ஸ்அப் செயலியை 1.6 பில்லியன் பேர் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆனால் வளரும் டெலிகிராம் செயலியை 200 மில்லியன் பேர் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே