உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 8 பதக்கங்கள் வென்ற முதல் குத்துச் சண்டை வீராங்னை என்ற பெருமையை மேரி கோம் பெற்றுள்ளார்.
11-வது பெண்கள் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷ்யாவின் உலன் உடே நகரில் நடந்து வருகிறது.
இதன் 51 கிலோ எடைப்பிரிவுக்கான காலிறுதிப் போட்டியில் இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் கொலம்பிய வீராங்கனை இங்க்ரிட் வலென்சியாவும் மோதினார்.
இதில் மேரி கோம் அபாரமாக விளையாடி கொலம்பியா வீராங்கனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
முன்னதாக, 6 தங்கம் மற்றும் 1 வெள்ளி பதக்கத்தை கையில் வைத்திருக்கும் மேரி கோம், அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் எட்டாவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 8 பதக்கங்கள் வென்ற முதல் குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையை மேரி கோம் பெற்றுள்ளார்.
அதேபோல் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் 51 கிலோ எடைப்பிரிவில் மேரி கோம் பெரும் முதல் பதக்கம் இதுவாகும்.