சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன.

அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி சென்னையில் நேற்று(பிப்.,26) பெட்ரோல் லிட்டர் 92.59 ரூபாய், டீசல் லிட்டர் 85.98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 2 நாளாக விலையில் மாற்றம் ஏதும் இன்றி இருந்த நிலையில், (பிப்., 27) இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் அதிகரித்து ரூ.93.11-க்கும், டீசல் லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ.86.45-க்கும் விற்பனை விற்பனையாகிறது.

இந்த விலை உயர்வு இன்று காலை 6 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் – டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே