ரஜினிகாந்த் தமிழர்களுக்கு மட்டுமல்ல; ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் சூப்பர் ஸ்டார் – அபுபக்கர்

ரஜினிகாந்த் தமிழர்களுக்கு மட்டுமல்ல அவர் ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் சூப்பர் ஸ்டார் என இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் அபுபக்கர் கூறியுள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை இந்தியாவில் இருக்கக்கூடிய முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எதிர்க்கட்சிகள் தவறான கருத்துக்களை தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகளை தூண்டி விடுவதாக நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து பேசி வருகிறார்.

இதனடிப்படையில் இஸ்லாமிய அமைப்புகள் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு கூடிய பாதிப்புகள் பற்றி ரஜினிகாந்திற்கு விளக்கம் தேவை, அதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் அபுபக்கர், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து பேசினார்.

இதனை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அபுபக்கர் கூறுகையில், நீண்ட கால குடும்ப நண்பர் என்ற அடிப்படையில் ரஜினிகாந்தை சந்தித்ததாக தெரிவித்தார்.

மேலும் டெல்லி கலவரத்திற்கு எதிராக குரல் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்ததாகவும், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து எங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், குடியுரிமை சட்டம் குறித்து நாம் சொல்லி கொடுத்து ரஜினிக்கு தெரிய வேண்டியது எதுவும் இல்லை, அவர் ஒரு லெஜெண்ட் என்றார்.

ரஜினிகாந்த் தமிழர்களுக்கு மட்டுமல்ல அவர் ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் சூப்பர் ஸ்டார் எனக் கூறினார்.

அதுமட்டுமின்றி எல்லோரும் ஒரே நாட்டு மக்கள், தொப்புள் கொடி உறவுகள் என்றும், இந்திய நாட்டில் பொருளாதாரத்தில் நாடு சிறப்பாக வரவேண்டும் என்பது தான் நடிகர் ரஜினியின் எண்ணம் என்பது இந்த சந்திப்பின் போது தெரிய வந்தது என்றும் தெரிவித்தார்.

CAA குறித்து நாம வெறுப்பு பேச்சை பேசி எரியும் நெருப்பில் எண்ணெய ஊற்றக்கூடாது எனவும் அபுபக்கர் செய்தியாளர்களிடம் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே