இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தா.பாண்டியனின் உடல் இன்று நல்லடக்கம்..!!!

மறைந்த மூத்த அரசியல் தலைவர் தா.பாண்டியனின் உடல், மதுரையில் உள்ள அவரது சொந்த ஊரில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

சிறுநீரக தொற்று பாதிப்பு காரணமாக, கடந்த 24ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தா.பாண்டியன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

சென்னையில் உள்ள இல்லத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலும், வைக்கப்பட்ட அவரது உடலுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, திருமாவளவன், அமைச்சர் ஜெயக்குமார், உள்ளிட்ட பல தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

தா.பாண்டியனின் மறைவை அடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

இன்று காலை 8 மணிக்கு சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் தா.பாண்டியனின் உடல், உசிலம்பட்டி அருகேயுள்ள கீழ் வெள்ளைமலைப்பட்டியில் பிற்பகல் 2 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே