தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு அனுமதி அளித்து மாநில அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
வரும் மே மாதம் 3 ம் தேதி வரை நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இதனால் கடந்த 20 ம் தேதி முதல் மாநில அரசுகள் சூழ்நிலைக்கு ஏற்ப ஊரடங்கு தளர்வுகளை வழங்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் தமிழகத்தில் எந்தவொரு தளர்வும் இல்லை என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று 100 நாள் வேலை திட்டத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபோல் ஊரக பகுதிகளில் கட்டட பணிகள் துவங்கலாம், மத்திய மாநில அரசு அலுவலகங்களில் 33 சதவீத பணியாளர்கள் பணியாற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குடிநீர் விநியோகம், தூய்மைப்பணி, மின்சார துறை , செங்கல்சூளை, சாலைப்பணி , பாலம் கட்டும் பணி, நீர்ப்பாசனம், ஏரிகள் தூர்வாருதல், அணைபாதுகாப்பு, மருத்துவ கல்லூரியில் கட்டுமான பணி, பணியை மேற்கொள்ளலாம்.
அதே நேரத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிக்கும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கும் இது பொருந்தாது.