பிப்ரவரி 24ஆம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் 3ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. அதில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இதன்படி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அப்பொழுது முதலமைச்சர் பழனிசாமி , ஆதரவற்ற பெண்குழந்தைகளுக்கு 21-வயது நிரப்பும்போது ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.

பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளின் சமூக பொருளாதார நிலையை கருதி சிறப்பு உதவி தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஹஜ் பயணிகளுக்கு சென்னையில் ரூ.15 கோடியில் தங்கும் இல்லம் அமைப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

மேலும் உலமாக்களின் ஓய்வூதியம் ரூ.1500லிருந்து 3000ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே