கொரோனா வைரஸ் குறித்து தமிழக மக்கள் அச்சப்படத் தேவையில்லை – அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் மாணவ – மாணவிகள் பங்கேற்ற கிட்டாத்தான் என்ற ஓட்ட நிகழ்ச்சியை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு மற்றும் மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, மத்திய அரசு மூலம் தமிழகத்திற்கு பாதிப்புகள் ஏற்படும் நிலை வந்தால் அதனை முதல்வர் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று கூறினார். 

கொரோனா வைரஸ் குறித்து தமிழக மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே