மத்திய பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு 2,83,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020 – 2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துவருகிறார்.

அந்த பட்ஜெட் விவசாயத்துறைக்கு குறிப்பிடத்தகுந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

அதன்படி,

  • விவசாயிகள் வருமானம் 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கப்படும்.
  • 6.11 கோடி விவசாயகளுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
  • விவசாயம் தொடர்பான திட்டங்கள் மாநில அரசின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும்.
  • நபார்டு வங்கியின் மூலம் விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • சூர்ய மின்சக்தியில் இயங்கும் மோட்டார்களை அமைக்க 20 லட்சம் விவசாயிகளுக்கு உதவி வழங்கப்படும்.
  • விளைப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு தனியார் பங்களிப்புடன் தனி ரயில் அறிமுகப்படுத்தப்படும்.
  • தரிசு நிலங்களில் சூரிய மின்னுற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • விளை பொருள்களைக் கொண்டு செல்வதற்கு தனி விமானம் இயக்கப்படும்.
  • வேளாண் பொருள்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கு ஊக்கப்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

கடந்தமுறை விவசாயத்துறைக்காக, 1,38,563 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்தமுறை விவசாயத்துறைக்கு 2,83,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே