உடல்நலக்குறைவு காரணமாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
அவ்வபோது அவருக்கு தீடிரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், தற்போது அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் காட்பாடியில் துரைமுருகன் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து, அங்குள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதேபோல, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிலையில், திடீரென மூச்சு திணறலுடன் அதிகளவில் காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக அண்மையில் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.