வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் அனைவருக்கும் PCR சோதனை கட்டாயம் – தமிழக அரசு

வெளிநாட்டிலிருந்து பயணிகள் தமிழகத்திற்கு வந்தால் பிசிஆர் பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் தவறுகள் இருந்ததால் அந்த பரிசோதனை இந்தியா முழுவதும் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் விமான பயணத்துக்கான புதிய வழிகாட்டு நெறிமுறையை தெரிவித்துள்ளது.

அதில் கூறுகையில் வெளிநாட்டிலிருந்து தமிழகத்திற்கு விமானத்தில் வந்தால் கொரோனாவை அறிய பிசிஆர் சோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வருவோர் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

விமானத்தில் பயணம் செய்யும், முன்பாகவே தமிழகத்தில் பயணிப்பதற்கான இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும். 

தமிழகம் திரும்பும் அனைத்து பயணிகளுக்கும் தெர்மல் பரிசோதனை செய்யப்படும்.

மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு பிசிஆர் சோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும்.

வணிக பயன்பாட்டுக்காக 48 மணி நேரத்துக்குள் வெளிநாடு சென்று திரும்பியோர் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே