ரூ.11,700 க்கு 43 இன்ச் ஃபுல் HD ஸ்மார்ட் டிவி.. மிரள வைத்த சியோமி நிறுவனம்!

இந்தியாவின் மிகச் சிறந்த ஸ்மார்ட் டிவி நிறுவனம் என ஜியோமி பெயர் எடுத்துள்ளது. தற்போது 43 இன்ச் ஃபுல் ஹெச்டி டிவி ஒன்றை வெறும் 11,700 ரூபாய்க்கு கொண்டுவர உள்ளது. இந்த டிவி சீனாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிமுகமானது. சீனாவின் விலைப்படி 1,099 CNY ஆகும் இந்திய மதிப்பில் படி 11,700 ரூபாய் ஆகும். இது சீன சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த டிவியை இந்தியாவில் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அந்த டிவி, 43 இன்ச் ஃபுல் HD (1,920×1,080 பிக்சல்கள்) டிஸ்ப்ளே கொண்ட 60 ஹெர்ட்ஸ் ரெபிரேசிங் ரேட் மற்றும் 178 டிகிரி கோணத்தையும் பெறும்.

1.4 ஜிகாஹெர்ட்ஸ் க்ளாக் ஸ்பீட் கொண்ட டூயல் கோர் பிராஸசரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி, 1 ஜிபி அளவிலான ரேம் மற்றும் 8 ஜிபி அளவிலான இன்டர்னல் மெமரியை கொண்டுள்ளது. மற்ற ஸ்மார்ட் டிவியை போலவே, இதிலும் வைபை வசதி உள்ளது. ஆனால், ப்ளூடூத் வசதி கிடையாது. அதனால் வழக்கமான சியோமி டிவியில் வரும் ஸ்மார்ட் ரிமோட்க்கு பதில் இன்ப்ரா ரெட் ரிமோட் வழங்கப்படுகிறது.

டிவியின் இணைப்பிற்காக, இரண்டு HDMI போர்ட்களை வழங்கும். அவற்றில் ஒன்று HDMI ARC-ஐ ஆதரிக்கும் (High Definition Multimedia Interface Audio Return Channel). அதனை தவிர்த்து, ஒரு ஏ.வி. போர்ட், இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள் மற்றும் ஈதர்நெட் போர்ட்டும் வரும். ஆடியோவைப் பொறுத்தவரை, இந்த டிவியில் டிடிஎஸ் 2.0 (DTS 2.0) அம்சம், இரண்டு 8 வாட் ஸ்பீக்கர்களுடன் வரும்.

Related Tags :

Xiaomi| XiaomiTV


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே