இந்தியா : கொரோனா பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு

இந்தியாவைப் பொறுத்தவரை நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.

மகாராஷ்ரா, கேரளா போன்ற மாநிலங்களில்தான் இதன் பாதிப்பு அதிகம் உள்ளது.

கர்நாடகா, டெல்லி மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 3 முதியவர்கள் உயிரிழந்தனர்.

இதனிடையே, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 160-க்கும் மேலாக அதிகரித்துள்ளது.

இந்த வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருக்க மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 வயது முதியவர் இன்று சிகிச்சை பலனின்றி பலியானார்.

இதன்மூலம், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே