நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர்18-இல் தொடக்கம்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் அடுத்த மாதம் 18-ஆம் தேதி தொடங்குகிறது.

டிசம்பர் 13ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளின் செயலாளர்களுக்கும் அந்த அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

பொருளாதார மந்தநிலை, இ-சிகரெட் தடை அவசர சட்டமாக மட்டுமே இயற்றப்பட்டு உள்ளதால் அதற்கு மாற்றான மசோதாக்களை மத்திய அரசு அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ப்பொரேட் வரி விகிதம் குறைக்கப்பட்டது தொடர்பான அவசர சட்டமும், மசோதாவாக நிறைவேற்றப்பட்டு சட்டமாக வாய்ப்புள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே