கேரள மாநிலம் கொச்சியில் கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
எர்ணாகுளம், கொச்சி உள்ளிட்ட நகரங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது.
இதனால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிப்பதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
கொச்சி நகரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எர்ணாகுளம் மற்றும் கொச்சியில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் கொச்சியில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.